கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 99வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தியபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர் ஷர்மிளா, மண்டல குழுத்தலைவர்கள் கதிர்வேல் (வடக்கு), மீனா லோகு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



