கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இலவச கண்ணாடி வழங்கும் திட்டத்தில் கிட்டப்பார்வை குறைபாடு உள்ள முதியோர்களுக்கு கண்ணாடிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் வழங்கினர்.
அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் உள்ளனர்.



