fbpx
Homeபிற செய்திகள்வடகோவை- புதுடெல்லி இடையே சரக்கு விரைவு ரயில் மீண்டும் ஓடத்தொடங்கியது

வடகோவை- புதுடெல்லி இடையே சரக்கு விரைவு ரயில் மீண்டும் ஓடத்தொடங்கியது

கோவை வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லி படேல் நகருக்கு ஒப்பந்த அடிப்படையில், தனியார் நிறுவனம் மூலமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் சரக்கு விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது.

இதில் முகக்கவசங்கள், துணிகள், மருந்துகள், காய்கறி, பழங்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக சில மாதங்களாக இந்த ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த சரக்கு ரயிலை இயக்கி வந்த நிறுவனத்துடன் ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தம் நிறைவடைந்தது.

இந்தநிலையில் வேறு நிறுவனம் மூலமாக வடகோவை – புதுடெல்லி சரக்கு விரைவு ரயிலானது, ஒப்பந்த அடிப்படையில் கடந்த 14-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

15 பெட்டிகள் கொண்ட இந்த சரக்கு ரயில் சேவையை, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

மாதம் 2 முறை இயக்கப்படும் இந்த ரயிலானது சனிக்கிழமை காலை 10 மணிக்கு வடகோவை ரயில் நிலையத்தில் புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, நாகபுரி வழித்தடத்தில் புதுடெல்லியை திங்கள்கிழமை இரவு சென்றடையும்.

அங்கிருந்து புதன்கிழமை காலை 6 மணிக்குப் புறப்பட்டு நாகபுரி, ரேணிகுண்டா, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு வடகோவை ரெயில் நிலையத்தை வந்தடையும்.

படிக்க வேண்டும்

spot_img