fbpx
Homeபிற செய்திகள்தேசிய பளுதூக்கும் போட்டியில் அரசு பள்ளி மாணவன் சாதனை

தேசிய பளுதூக்கும் போட்டியில் அரசு பள்ளி மாணவன் சாதனை

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் திண்டுக்கல் மேற்கு ரத வீதி மாநகராட்சி தொடக்க பள்ளி மாணவன் கிறிஸ்து ராஜா இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தார்.

அவருக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், திண்டுக்கல் வர்த்தகர் சங்க தலைவர் சுந்தர்ராஜன் மாணவனுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், செயலாளர் கலையரசன் பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img