fbpx
Homeபிற செய்திகள்கீழக்கரையில் மாநில அளவில் மின்னொளி கையுந்து போட்டி-முதல் பரிசு ரூ.1 லட்சம்

கீழக்கரையில் மாநில அளவில் மின்னொளி கையுந்து போட்டி-முதல் பரிசு ரூ.1 லட்சம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பொதுமக்கள் சார்பாக ஹமீதியா விளையாட்டு மைதானத்தில் இளைஞர் கள் நடத்தும் முதலாம் ஆண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநில அளவிலான கையுந்து போட்டி நடைபெற்றது.

விழாவை எஸ்.பாசித் இல்யாஸ், செய்யது இப் ராஹீம், அசிபர்,அமீன் இட்டாலி, யாசின் சராப், காபர்கான் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தி னர்.

சதக் டிரஸ்ட் சேர்மன் ஜனாப் ஹாமீது இப் ராஹிம் தலைமை வகித்து பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை இராமநாதபுரம் சுங்கத்துறை துணை கமிஷ னர் ஜெய்சன் பிரவீன் குமார்,சதக் டிரஸ்ட் ஜனாப் சதக் அப்துல் காதர், ஹமீது பாருக்,சதக் இலியாஸ் கீழக்கரை டைம்ஸ் யாசின் ஜமாத் நிர்வாகிகள் கீழக்கரை பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.

முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் ஹமீது இப்ராஹிம்,இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் டாக்டர். கியாது தீன் பயோனியர் மருத் துவமனை இராமநா தபுரம், மூன்றாம் பரிசாக முப்பது ஆயிரம் ரூபாய் அவ்தாத் ஆகியோர் வழங் கினார்கள்.

மேலும் இந்த விளையாட்டில் இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

போதையை முற் றிலுமாக ஒழிக்கவேண்டும் என்பதே எங்களின் நோக்கம் இதேபோல் ஒவ் வொரு ஆண்டும் நடத்த திட்டமிட்டுள் ளோம் என கமிட்டி உறுப்பினர்கள் கூறினர்.

தங்களுக்கு முழு ஆதரவு தந்த ஹமீதியா மேல்நிலைப்பள்ளி செய்யது சலீம் மற்றும் நிர்வாகிகளுக்கு கமிட் டியின் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img