fbpx
Homeபிற செய்திகள்‘ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்’ இராணிப்பேட்டை மாவட்டத்தில் பயனடைந்தோர் 2082 பேர்...

‘ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம்’ இராணிப்பேட்டை மாவட்டத்தில் பயனடைந்தோர் 2082 பேர் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின்’ கீழ், இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2082 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில், கடந்த 23.09.2021 அன்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், ஒரு இலட்சம் உழவர் மின் இணைப்பு வழங்கும் பணியை விவசாயிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

கடந்த 16.04.2022 அன்று ஒரு இலட்சமாவது இலவச மின் இணைப்புக்கான உத்தரவை முதல்வர் பயனாளிக்கு வழங்கினார். இதனையும் சேர்த்து தமிழ்நாட்டில் வேளாண் தொழில் செய்வோரின் எண்ணிக்கை 21.80 இலட்சமாக உயர்ந்துள்ளது.

நிலப்பரப்பு அதிகரிப்பு
ஒரு இலட்சம் வேளாண் மின் இணைப்புகளினால், தமிழ்நாட்டின் வேளாண் நிலப்பரப்பு 2,13,107 ஏக்கர் அதிகரித்திருக்கிறது.
சுமார் 6,30,340 குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்கள் மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியதற்கு ரூ.803 கோடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழக முதலமைச்சர் ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆற்காடு கோட்டத்தில் 423 விவசாயிக ளுக்கும், இராணிப்பேட்டை கோட்டத்தில் 264 விவசாயிகளுக்கும், சோளிங்கர் கோட்டத்தில் 930 விவசாயிகளுக்கும், அரக்கோணம் கோட்டத்தில் 465 விவசாயிகளுக்கும் என இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2082 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

‘காத்திருப்புக்குப் பின் இப்போ மகிழ்ச்சி’
ஒரு இலட்சம் விவசாய இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகள் தெரிவித்ததாவது:
என்னுடைய பெயர் நாகேந்திரன். இராணிப்பேட்டை மாவட்டம் (ம) வட்டம், கிராமத்தில் வசித்து வருகிறேன்.

எங்களுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். நாங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். த

மிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் விவசாயிகள் பயன்பெறுகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்கின்ற வகையில் 1 இலட்சம் விவசாயம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

ஆற்றுப்பாசனத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் விவசாய மின் இணைப்பிற்காக விண்ணப்பித்து காத்திருந்த எனக்கு, தற்போது மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

‘பாசன வசதி பெற்றது 2.3 ஏக்கர் புஞ்சை நிலம்’
இராணிப்பேட்டை மாவட்ட போளிப்பாக்கம் கிராமம், பழனி, த/பெ. இராமா ரெட்டி என்ற விவசாயி தெரிவித்ததாவது: இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா, போளிப்பாக்கம் கிராமத்தில் நானும் என் னுடைய குடும்பமும் வசித் து வருகிறோம்.

எங்களுக்கு 2.3 ஏக்கர் நிலம் இருக்கி றது. ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறோம். 2012-ல் விவ சாய கரண்ட் கேட்டு விண்ணப்பித்து இருந்தோம்.நாங்கள் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தோம்.

தற்போது நமது முதல்வர் ஒரு இலட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை 23.09.2021 அன்று தொடங்கி வைத் தார். இதில் என்னு டைய 2.3 ஏக்கர் புஞ்சை நிலம் பாசன வசதி பெற்றுள்ளது.

இதன் மூலம் என்னுடைய குடும்பத்திற்கு நிரந்தர வருமானம் ஏற்படுத்தி தந்தமைக்கும், என்னை போன்ற ஏழை எளிய விவசாயிகளுக்காக இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய முதல்வர், தமிழக அரசுக்கு என் சார் பாகவும், என்னுடைய குடும்பத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

‘துரித நடவடிக்கையால் நிரந்தர வாழ்வாதாரம்’
இராணிப்பேட்டை மாவட்ட பணப்பாக்கம் கிராமம், நரசிம்மன், த/பெ. கணேசன் என்ற விவசாயி தெரி வித்ததாவது: இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுக்கா, பனப்பாக்கம் கிராமத்தில் நானும் என்னுடைய குடும்பமும் வசித்து வருகிறோம்.

11 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய கரண்ட் கேட்டு விண்ணப்பித்து இருந்தோம். இதுவரையில் மின் இணைப்பு கிடைக்காமல் நாங்கள் கஷ்டப்பட்டு வந்தோம்.

தற்போது நமது முதல்வர் ஒரு இலட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் துரித முறையில் மின் இணைப்பு வழங்கி என்னுடைய குடும்பத்திற்கு நல்ல நிரந்தரமான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தி தந்தமைக்கு என் சார்பாகவும், என்னுடைய குடும்பத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
செ.அசோக்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
இராணிப்பேட்டை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img