fbpx
Homeபிற செய்திகள்எஸ்.என்.எஸ். பிசியோதெரபி கல்லூரியில் மெகா ரத்ததான முகாம்

எஸ்.என்.எஸ். பிசியோதெரபி கல்லூரியில் மெகா ரத்ததான முகாம்

கோவையில் எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனங்கள், அரிமா மாவட்டம் 324 பி 1 செல்வராஜன் இரத்த வங்கி, ரோட்ராக்ட் டெக்ஸ்சிட்டி உட்பட பல் வேறு இரத்த வங்கிகள் இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் கல்லூரி மாணவ, மாணவிகள் இரத்த தானம் வழங்கினர்.

கொரோனா கால கட்டத்திற்கு பிறகு உயிர் காக்க இரத்தத்தின் தேவை அறிந்து பல்வேறு தன் னார்வ அமைப்பினர் இரத்த தானம் செய்து வரு கின்றனர்.

எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்கள் மற்றும் அரிமா மாவட்டம் 324 பி 1 செல்வராஜன் இரத்த வங்கி, ஐ.எம்.ஏ.இரத்த வங்கி, குமரன் மெடிக் கல் இரத்த வங்கி, கே.ஜி.மருத்து வமனை இரத்த வங்கி ஆகியன இணைந்து குரும்பப்பாளையம் பகுதி யில் உள்ள எஸ்.என்.எஸ்.பி சியோதெரபி கல்லூரி வளாகத்தில் மெகா இரத்ததானம் முகாமை நடத்தியது.

கல்லூரி முதல்வர் ராஜா செந்தில் தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில், கோவை மாவட்ட அரிமா 324 சி மாவட்ட பி.ஆர்.ஓ.மற்றும் நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் செந்தில் குமார் முகாமை துவக்கி வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளர் களாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டீன் டாக்டர் பழனிசாமி, தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் செந்தூர் பாண்டி யன், ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயமுத்தூர் டெக்ஸ்சிட்டி தலைவர் வரலட்சுமி, அட்வைசர் தங்கபாண்டியன், ஈவெண்ட் மானேஜர் அர் ஜூன், நேரு நகர் அரிமா சங்க நிர்வாகிகள் ஹரீஷ் பாஸ்கர், செமிக் முகம்மது ஆகியோர் கலந்து கொண் டனர். எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனங்களின் பல்வேறு துறை கல்லூரிகளை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இரத்த தானம் செய்தனர்.

பிசியோதெரபி கல்லூரி அசோசியேட் பேராசிரி யர் சுமித்ரா, பொறியியல் கல்லூரி இணைப் பேராசி ரியர்கள் கௌசிக ராமன், ஸ்ரீலட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img