ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல் லூரியில், மாநில அள வில் கல்லூரிகளுக்கு இடை யிலான மாணவர் திருவிழா (Fiesta’2022), பி.காம். சி.ஏ. துறை சார்பில், நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். பி.காம். சி.ஏ. துறைத்தலைவர் முனைவர் ஆர்.கீதா அறிக்கை வாசித்தார்.
கோவை மத்திய பாதுகாப்பு காவல்படை யின் மத்திய பயிற்சிக் கல்லூரி கமாண்டன்ட் ராஜேஷ்குமார், தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் பல் வேறு மொழிகளைப் பேசுபவர்கள் வசித்து வந் தாலும், அனைவரையும் ஒருங்கிணைப்பது இந்தியர் என்ற மையப்புள்ளியே.
நம்முடைய நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப் பது, இன்றைய இளைய சமுதாயத்தினரின் தலை யாய கடமை. இது நம்மை இந்தியர்கள் என்று பெருமிதமடையச் செய்யும்.
இதுபோன்ற மாணவர் திருவிழாக்களில் நம்முடைய திறமைகளை வெளிப்படுத்த முடியும். மற்ற மாணவர்களிடம் இருந்து புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள் ளலாம். நம்முடைய திற மையால் மற்றவர்களை வெல்லவும் முடியும் என் றார். பாரதியார் பல்கலைக் கழக அண்ணா ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் முனைவர் எம்.பத்மநாபன் பேசினார்.
பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள மாணவர்களைப் பாராட்டி கமாண்டன்ட் ராஜேஷ் குமார் நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
மாணவர் திருவிழாவில் தமிழகத்தில் 50 கல் லூரிகளைச் சேர்ந்த ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப் படுத்தி பரிசுகளை வென்றனர். இதற்கான ஏற்பாடு களை பி.காம். சி.ஏ. துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்த னர்.



