மூளையில் இரத்த நாள வீக்கத்தால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் நாட்டு பெண் ணுக்கு, குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கண் இமை சோர்வு மற் றும் இடது கண் விழியினை அசைக்க இயலாமை உள் ளிட்ட பிரச்சினைகளுடன் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் (ஜிகேஎன் எம்) சேர்க்கப்பட்டார். இவ ருக்கு இடது கண்ணில் இரட்டைப் பார்வைக் கோளா றும் இருந்தது.
மருத்துவப் பரிசோதனையில் இவருக்கு மூளையின் இடது பக்கத்தில் உள்ள இரத்த நாளத்தில் வீக்கம் (Aneurysm) இருப்பது கண்டறியப்பட்டது. அனீரிசம் என்பது இரத்த நாளத்தில் பலூன் போன்று ஏற்படுகிற வீக்கம் ஆகும்.
இதனால் இரத்த நாளத்தில் முறிவு ஏற்பட்டால் மூளையின் உட்சவ்வு பகுதியில் இரத்தம் வெளியேறும்(Subarachnoid Hemorrhage) அபாயம் நிகழ வும் வாய்ப்பு உண்டு. தாங்க இயலாத அதிதீவிர தலைவலி முதல் சுயநினைவு இழப்பு மற்றும் மரணம் ஏற்படுதல் வரையில் இதன் விளைவுகள் மாறுபடும்.
கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் நியூரோ இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட் மருத்துவர் ராஷ்மிரஞ்சன் பதி தலைமையி லான மருத்துவக் குழுவினர் இந்த பெண்ணுக்கு ஃபுளோ டைவர்ட்டர் ஸ்டென்ட்(Flow Diverter Stent) மூலமாக அதிநவீன முறையில் சிகிச்சை அளித்தனர்.
மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் தொடைப்பகுதியில் சிறிய அளவில் துளையிட்டு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை முடிந்த 2 நாட்களிலேயே இரட்டை பார்வை கோளாறில் முன்னேற் றம் ஏற்பட்டு இவர் வீடு திரும்பினார். இவரது மண்டை நரம்பு வாத நோய் (Cranial Nerve Palsy) சில மாதங்களில் முழுவதும் குணமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து வகையான நியூரோ இன்டர்வென்ஷனல் சிகிச்சைகளுக்கும் ((Neuro Interventional Procedures) ஏற்ற பைப்லேன் கேத்லேப்(Biplane Cathlab) வசதி கொண்ட பக்கவாத சிகிச்சைக்கு என்று தயார் நிலையில் உள்ள பிரத் யேக மருத்துவமனையாக திகழ் கிறது ஜிகேஎன்எம்.
இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.



