மகளிர்க்கான இல வச பேருந்து பயணத் திட் டத்தில், சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை 1,42,41,176 மகளிர் கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.
முதல்வராக பொறுப் பேற்றது முதல், தமிழக மக்கள் தங்களது வாழ்வில் வளம் பெறுகின்ற வகை யில், கோரிக் கைக ளுக்கு முன்பாகவே பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின்.
குறிப்பாக, பெண்களின் வாழ்க்ககைத்தரம் முன் னேற்றத்திற்காக எண் ணற்ற மக்கள் நலத்திட் டங்களை தீட்டி அவர் களை பயன்பெற செய்து வருகிறார். அதில், கிராமப்புறங்களில் வாழ்கின்ற பெண்கள், ஆதர வற்றவர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளைக் கருத்தில் கொண்டு, தனிநபர் வருமானத்தை பெருக்கு வதால் குடும்பப் பொருளாதாரம் உயரும், குடும்ப பொருளாதாரம் உயர்ந்தால், ஒரு கிராமத்தின் பொருளாதாரமும் உயர்ந்து, அதன்மூலம் மாநிலத்தின் பொருளாதாரமும் முன் னேற்றம் அடையும் என்பதனை அடிப்ப டையாகக் கொண்டு, கிராமப்புறங்களில் வாழ் கின்ற ஏழை, எளிய பெண்களுக்கு பல்வேறு
தொழில் சார்ந்த பயிற்சி அளித்து, தொழில்
தொடங்கி பயன் பெறும் வகையிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அவர்களின் வாழ் வாதா ரத்தை மேம்படுத்தி வரு கிறார்.
முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்துகின்ற வகையில், 5 முக்கிய அரசாணைகளை பிறப்பித்தார்கள். அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக் குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.
அவ்வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தினை செயல் படுத்துகின்ற வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப்
பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும்
மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்து பயன் பெறுகின்ற வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
அதன்படி, மேற்கண்ட திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை 1,42,41,176 மகளிர் கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.
‘பேருந்து கட்டணம் சேமிப்பாக மாறுகிறது’
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற சிவகங்கை வட்டம், ஒக்கூர் பகுதியைச் சார்ந்த பணிபுரியும் மகளிர் தேவி தெரிவிக்கையில், நான் ஒக்கூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்.
எனது கணவர் கூலி வேலை பார்த்து வருகிறார். எனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, குடும்ப சூழ்நிலையின் காரணமாக அருகில் உள்ள நகரமான சிவகங்கையில் எரிவாயு நிரப்பும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.
எ
னக்கு கிடைக்கப்பெறும் மாத வருவாயின் மூலமும், எனது கணவரின் அன்றாட கூலியின் மூலமும் எங்களது வாழ்க்கையினை நடத்தி வருகிறோம். அதில் தினமும் நான் வேலைக்கு சென்று வருவதற்கான பேருந்து கட்டணமும் எங்களது செலவில் இருந்து வந்தது.
எங்களைப் போன்றவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, முதல்வர் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில், மகளிர்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தினை ஆட்சிப்பொறுபேற்றவுடன் முதல் கையெழுத்துகளில் ஒன்றாக அறிவித்தார்.
அதன்படி, கடந்த மே மாதம் முதல் நான் வேலைக்கு சென்று வருகிறபோது, கட்டணம் இல்லாமல் எனது பேருந்து பயணத்தினை மேற்கொண்டு வருகிறேன். பேருந்து பயணத்திற்கான அன்றாடச் செலவும் எனக்கு சேமிப்பு ஆகின்றது.
இதனைக்கொண்டு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. இதுபோன்று, பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் தேவைகளை அறிந்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, பயன்பெறச் செய்து வருகின்ற முதல்வருக்கு அனைத்து மகளிர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
‘தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது’
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற சிவகங்கை வட்டம், குமாரப்பட்டி பகுதியைச் சார்ந்த உயர்கல்வி பயிலும் கா.காளீஸ்வரி தெரிவிக்கையில், நான் சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன்.
எனது ஊர் குமாரப்பட்டிஆகும். எளிமையான குடும்பத்தை சேர்ந்தவள். தந்தை விவசாயம் செய்து வருகிறார். சகோதர, சகோதரிகள் பள்ளிப்படிப்பை மேற் கொண்டு வருகின்றனர். எங்களுக்கான பள்ளி, கல்லூரிக் கட்டணம் மற்றும் மாதாந்திர குடும்பச் செலவு உள்ளிட் டவற்றை தந்தையின் வருமானத்தின் மூலம் மேற்கொண்டு வரு கிறோம்.
இதில், நான் கல்லூரிக்கு சென்று வருவதற்கான பேருந்து கட்டண செலவும் இருந்து வந்தது. முதல்வர் கடந்த மே மாதம் 7-ம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் என்னைப் போன்ற மாணவியர்கள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணம் இல்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என்று அறி வித்து, இத்திட்டத்தினை அதன் மறுதினமான மே 8-ம் தேதி முதல் நடை முறைப்படுத்துவதற்கும் உத்தரவிட்டார்.
அதன்படி, அன்றையதினம் முதல் நான் கல்லூரிக்கு கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதன்மூலம் பேருந்து கட்டணத்திற்கான செலவு எனக்கு மிச்சமாகி, அதற்கான செலவினை சேமிப்பாக்கி, எனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன்.
மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் எங்களைப் போன்ற மாணவியர்களின் தேவைகள் அறிந்து, நாங்கள் பயன்பெறும் வகையில் இதுபோன்று திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தி வரும் முதல்வருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றார்.
தொகுப்பு:
அ.கொ.நாகராஜ பூபதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
மு.ராஜசெல்வன்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
சிவகங்கை மாவட்டம்.



