கோவை, அவினாசிலிங் கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனமும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகமும் இணைந்து நேற்று (ஏப்.27) டாக்டர் நா.மகாலிங்கம் முத்துவிழா அறக்கட்டளைச் சொற் பொழிவினை நடத்தின.
ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் தி.ச.க. மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கி பேசியதா வது:
நா.மகாலிங்கம் அன் பின் வழியில் நின்று ஆன்மீகத்தை அடித்தள மாகக் கொண்டு அறப் பணியாற்றியவர்.
சமுதாய நலனில் அக்கறை கொண்டு பல்வேறு சேவைகளைச் செய்தவர். தாய்மொழிப் பற்றின் காரணமாக தமிழில் பல நூல்களை எழுதியும், பதிப்பித்தும் தமிழ்ப்ப ணியைத் தொடர்ந்து அறப் பணியாகச் செய்து வந்தவர். ஆன்மீகப் பணியில் வள் ளலாரின் சன்மார்க நெறி யைப் பின்பற்றியவர்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலாரின் பெயரில் பல இடங்களில் அருட்ஜோதி மன்றங்களைத் தொடங்கி சிறப்பாக ஆன்மீகப் பணி யைச் செய்து வள்ளலாரின் பூரண அருளைப் பெற்றவர்.
கல்வி அறிவு பெற்ற பெண்களே குடும்ப முன் னேற்றத்திற்கும் நாட் டின் மேம்பாட்டிற்கும் பாடு படுவர் என்பதை மனதில் கொண்டே மகளிர் கல்வி மேம்பாட்டிற்காக இந்த கல்வி நிறுவனத்தை உரு வாக்க முடியும். கல்விச் செல்வத்தோடு கேள்விச் செல்வமும் இணைந்தே அறிவை வளர்க்கும் என் றார்.
அவினாசிலிங்கம் மனை யியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் முன்னாள் வேந்தர் மற்றும் வாழ்நாள் அறங்காவலர் முனைவர் க.குழந்தைவேல் பேசும்போது, அரசியல் தலைவராகவும், தொழிலதிபராகவும், இலக்கியவாதியாகவும், ஆராய்ச்சியாளராகவும் ஆன்மீகவாதியாகவும் செயலாற்றிய பன்முகத் தலைவர் என்றார்.
துணைவேந்தர் வை.பாரதி ஹரிசங்கர் பேசுகையில், இலக்கியத் திற்கு அவர் ஆற்றிய தொண்டும், ஆன்மீகத்தில் ஈடுபாடும் கொண்ட அவ ரது வழியைப் பின்பற்றி னால் மாணவர்கள் சிறந்த எதிர்காலம் அடையலாம் என்றார்.
சக்தி சுகர்ஸ் லிட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ம.மா ணிக்கம் பேசுகையில், நம் கடமையைச் செய்வதற்கு படிப்பு ஒரு படிக்கட்டாக அமைகிறது. பாடத்தில் விரும்பிய பிரிவை எடுத் துப் படித்தால் வெற்றி பெறலாம்.
ஒளிமயமான எதிர்காலத்திற்கு கல்வியே காரணமாகிறது என்று குறிப்பிட்டார்.
முனைவர் ம.மனோன் மணி வரவேற்றார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மு.கவிதா நன்றி கூறினார்.



