கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல்கல்லூரியின், அக தர மதிப்பீட்டுக் குழு IQAC) சார்பில், தேசிய தர நிர்ணயக் குழுவின் (NAAC) நிதியுதவியுடன் ‘புதிய கல்விக் கொள்கை – 2020:
தகவல் தொடர்பு தொழில் நுட்பங் களைப் பயன்படுத்தி கற்பித்தல் தரத்தை மாற்றிக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான இணைய வழி கருத் தரங்கம் நேற்று (ஏப்.21) தொடங்கியது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைகல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கணிதத் துறைத் தலைவர் மற்றும் அக தர மதிப்பீட்டுக் குழு இயக்குநர் முனைவர் என்.உமா வரவேற்றார்.
பி.எஸ்சி. சி.எஸ்., சி.எஸ். துறைத் தலைவரும், கல்லூரியின் தேசிய தர நிர்ணயக்குழு (NAAC) ஒருங்கிணைப்பாளருமான முனைவர் வி.கிருஷ்ணபிரியா கருத்தரங்கின்நோக்கம் குறித்து பேசினார்.
புனே சிஎஸ்ஐஆர் தேசிய வேதியியல் ஆய்வக மூத்த தலைமை விஞ்ஞானி முனைவர் எம்.கார்த்திகேயன் கருத்தரங் கைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
நாம் எந்த நிலையில் இருந்தாலும், ஒவ்வொரு நாளையும் புதிய நாளாக பாவித்து செயல்பட வேண்டும்.
தோல்விகளே வெற்றிக்கான படிக்கட்டுகள். தோல்வியடைந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட வேண்டுமே தவிர, துவண்டு விடக்கூடாது. எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.
எப்போதும் உயர்ந்த எண்ணங்களுடன் பரந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். கற்றல், கற்பித்தலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, தகவல் தொடர்பு தொழில் நுட்பக் கருவிகளைப் (ஐசிடிடூல்ஸ்) பயன்படுத்தி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தற்போது கற்பிக்க வேண்டியது அவசியம் என்றார்.
யூடியூப் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கூகுள்மீட் வழியாக கருத்தரங்கம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரி நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரியர் சையது வாஜீத், காக்னி சென்ட் நிறுவன அவுட்ரீச் இந்தியத் தலைவர் எம்.பாலகுமார் தங்கவேலு, நைஜீரியா ஸ்கைலைன் பல்கலைக்கழக டீன் முனைவர் செந்தில்குமார், மங்களூரு அரசு முதல் தரக்கல்லூரி இணைப் பேராசிரியர் மனோஜ்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
பன்னாட்டு வணிகத் துறைத் தலைவர் மற்றும் அக தர மதிப்பீட் டுக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஐ.பர்வீன்பானு நன்றி கூறினார்.



