அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ் வுகள், ஏழை எளிய மக்கள் நலத்திட்ட உதவிகள் , சமூக பணியினை ஊக்குவிக்க சாதனையாளர்களுக்கு விருதுகள், மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் என சகலரும் பயன் பெரும் அமைப்பாக மிகப்பெரும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் கோவை கேரளா கிளப் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு நிறுவனதலைவர் ஆர். கே.குமார் தலைமை வகித்தார்.
அகில இந்திய பொது செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார், காவல் உதவி ஆணையாளர் ராமச்சந்திரன் (ஓய்வு), AIPRALAO துணைத் தலைவர் வழக்கறிஞர் பி.சுந்தரபாலன் சிறப்புரை யாற்றினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நீதிபதியும் சிறந்த தமிழ் உணர்வாளருமான முகமதுஜியாபுதீன் கலந்து கொண்டு பேருரையாற்றி மகளிருக்கான பாதுகாப் புக்கு தேவையான பல வழிமுறைகளை சிறப்பாக எடுத்துரைத்தார்.
தமிழர்களின் தலையாய அய்யன் திருவள்ளுவரின் திருக்கு றளின் சிறப்பை மகத்தான மாண்பை அற்பு தமாக கூறி, மகளிருக்கு விருதுகள் வழங்கினார்.
லதா அர்ஜுனன் – (தாய்மைஉள்ளம்), அம்பிகா பாலசுப்பிரமணியம் -(சிறந்த பழமொழி தொகுப்பாளர்), சித்ரகலா -(சமூக ஆர்வலர்), சாந்தினி குமார் – (சிறந்த அடிப்படை கர்நாடக சங் கீத ஆசிரியை), லயன். சுப்பு -(சிறந்த எழுத்தாளர்) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கழக பொறுப்பாளர்களுக்கு அடையாளஅட்டை வழங் கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டுவரும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள், திருச்சி மாவட்ட நிர்வாகி கள் சமூக சேவகர் உலிக்கல் சண்முகம் ஆகியோருக்கு விருதுகள் வழங் கப்பட்டது. நிகழ்ச்சியை மகளிர் அணி செயலாளர் முத்தமிழ்செல்வி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
நிகழ்ச்சியில் வி.கிருஷ்ணசாமி (கௌ ரவத்தலைவர்). எஸ்.என்.பாலசுப் ரமணியன் (து¬ ணத் தலைவர்), வழக் கறிஞர் சுந்தரபாலன் (கோவை மாவட்ட செய லாளர்), வழக்கறிஞர் கே.ஜெயப்பி ரகாஷ் (துணைத்தலைவர்), வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி (துணைத்தலைவர் மகளிர் அணி), வழக்கறிஞர் ஜி.சந்தோஷ் (வழக்கறிஞர் பிரிவு), வி.தர்மக்கண்ணன் (துணைத்தலைவர் – கல்வித்துறை), முத்தமிழ் செல்வி மகளிர் அணி செயலாளர், ராஜேஷ் குமார் கௌரவத்தலைவர், லயன்ஸ் எஸ்.செந்தில் குமார், (துணைத்தலைவர்), தாமஸ் (துணைத்தலைவர்), திருச்சி தமிழ் வெங்கடேசன் (துணைத்தலைவர்- நீலகிரி), ரமேஷ் குமார் (துணைத்தலைவர்), சித்ரகலா (இணைச்செயலாளர் -மகளிர் அணி) மற்றும் அனைத்து பொறுப் பாளர்களும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.



