fbpx
Homeபிற செய்திகள்கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு எரிபொருள் சிக்கனத்திற்காக பரிசு

கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு எரிபொருள் சிக்கனத்திற்காக பரிசு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவைக் கோட்டத்துக்கு, தேசிய அளவிலான எரி பொருள் சிக்கனத்தில் 2-ம் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

கேடயம் மற்றும் பரிசை பெட்ரோலியத்துறை அமைச்சரக செயலர் பங்கஜ் ஜெயின் வழங்கினார். அவரிடம் இருந்து கோவை மேலாண்மை இயக்குநர் ஆ.ஆறுமுகம் பெற்றுக் கொண்டார்.

தேசிய அளவிலான போக்குவரத்துக் கழகங்க ளில் டீசல் செயல் திறனில் இலக்கை எய்தியதற்காக சிறந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசின் பெட்ரோலியம் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி கழகத் தால் பரிசு, கேடயம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2020-2021ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிமிடெட் நிறுவனத்திற்கு கிராமப்புற சேவையில் 3000-ம் பேருந் துகளை இயக்கி

எரி பொருள் சேமிப்பில் இலக் கை எட்டி சாதனை புரிந்துள்ளது.
இதற்காக ரூ.2 லட்சத்திற்கான பரிசுத் தொகையும், கேடயம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img