fbpx
Homeபிற செய்திகள்இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சிறப்புரை

இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சிறப்புரை

கோவை இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் மு. செந்தமிழ்செல்வன், கூடுதல் பதிவாளர் (ஓய்வு) பயிற்சியாளர்களிடையே “முயற்சி, முனைப்பு, உத்வேகம் “ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்ப திவாளர் / முதல்வர் நா.ஸ்ரீதர் வரவேற்றார். இந்நிகழ்வில் கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் இந்துமதி, டியூகாஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் சிவக்குமார், கோபி தாய்தமிழ் பள்ளி தாளாளர் குமணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர். விழா நிகழ்ச்சிகளை மேலாண்மை நிலைய விரிவுரை யாளர் ரத்னவேல் தொகுத்து வழங்கினார்.

ஏற்பாடுகளை மேலாண்மை நிலைய பணியாளர்கள் சுசீலா, நிர்மல், ராஜபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.
மேலாண்மை நிலைய விரிவுரையாளர் கார்த்திகை செல்வி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img