தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியர் மரு.இரா. வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பட்டுகோணம் பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.25 லட்சம் மதிப் பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணி, ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு கட்டும் பணி, மற்றும் மாவட்ட ஊராட்சியின் மாநில நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ.1.27 லட்சம் மதிப்பீட் டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவை பார்வையிடப்பட்டது.
இருளப்பட்டி ஊராட் சியில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு கட்டும் பணி மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 ஆயிரம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடு பழுது பார்த்தல் பணி ஆகியவை பார்வையிடப்பட்டது.
புதுப்பட்டி ஊராட்சி யில் ரூ.15.34 லட்சம் மதிப்பீட்டில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டும் பணி மற்றும் ரூ.22.69 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும் பணி ஆகியவை பார்வையிடப்பட்டது.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா.அருள்மொழித்தேவன், க.அமரவேல், உதவி பொறியாளர்கள் சுரேஷ்குமார், சயத்காளி அகமத் மற்றும் பணிமேற்பார்வையாளர்கள் என்.முருகன், எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.



