fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற ஈரோடு மாணவி

சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற ஈரோடு மாணவி

சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஈரோடு மாணவி கோமதிக்கு, பாஜக, எம்.எல்.ஏ., சரஸ்வதி நேரில் வரவேற்று பாராட்டுக்களை தெரிவித்தார்.

நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யூத் கேம்ப் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்பில் சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஈரோடு மாணவி .
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் கோமதி.

இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கோமதி சிலம்பம் சுற்றுவதில் கைதேர்ந்தவர். இவர் பல்வேறு மாநில, தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் நேபாள நாட்டில் கடந்த 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடந்த சர்வதேச அளவிலான போட்யில் கோமதி கலந்து கொண்டு, தங்க பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

இதையடுத்து, நேபாள நாட்டில் இருந்து ஈரோடு திரும்பிய மாணவி கோமதியை, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., சரஸ்வதி நேரில் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்று, பாராட்டு தெரிவித்தார்.

மேலும், பயிற்சியாளரும், அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img