அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பாக நீதிபதி கற்பக விநாயகத்துக்கு பா ராட்டு விழா மற்றும் சாத னையாளர்களுக்கான பாராட்டு விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.
நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவ தும் உள்ள நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து,, கோவையில் பல்வேறு சமூக சேவை திட்டங்களை செயல் படுத்தி வரும், நேரு நகர் அரிமா சங்கத்தின் த¬ லவர் செந்தில் குமாருக்கு, சிறந்த சாதனையாளர் விருதை நீதிபதி கற்பக விநாயகம் வழங்கி கவுரவித்தார்.
விழாவில், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநில தலைவர் என்.சுந்தர வடிவேலு ,துணைத் தலைவர் எஸ்.என்.பாலசுப்பிரமணியன், கௌரவத் தலைவர் டி.கே.கார்த்திகேயன், பொது செயலாளர் டாக்டர் வி.எச்.சுப்பிரமணியம், கௌரவத் தலைவர் ஆர்.ராஜேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்



