நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிக ரித்து வருடந்தோறும் தொடர்ச்சியா கவும், இயற்கையாகவும் மழை பெறும் நிலையை உருவாக்க ‘பசுமை நாமக்கல் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்தார்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரம் வளர்க்கும் ஆர்வலர்கள், அரசு துறைகள், மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், வங்கிகள், தனியார் தொண்டு அமைப்புகள்மூலமாக கோவில் நிலங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சாலைகள், பயன்பாடற்ற நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியம் அரூர் ஊராட்சி, ஆண்டபுரம் ஊராட்சி, வளையப்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் வைத்து வளர்க்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாபி.சிங் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட் டத்தின் கீழ் அரூர் ஊராட்சி ஈச்சங்கோவில்பட்டி கிராமத்தில் ரூ.1.89 லட்சம் மதிப்பீட்டில் மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டு நீரூற்றி பராமரிக்கப்படுகின்றன.
ஈச்சங்கோவில்பட்டியில் ரூ.1.26 லட்சம் மதிப்பீட்டில் கசிவுநீர் குட்டை அமைக் கும் பணி நிறைவடைந்தது. மரக்கன்றுகள் மரங்க ளாக உருவாக தொடர்ந்து நீருற்றி வளர்ப்பதற்காக ரூ.12.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட த்தின் கீழ் அரூர் ஊராட்சி ஆலாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.1.55 லட்சம் மதிப்பீட்டில் 560 எண்ணிக்கையிலான மூலிகைச் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஆலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சத்தான காய்கறிகளை உற்பத்தி செய்வதற்காக ரூ.12 ஆயிரம் செலவில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு நீரூற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது.
அரூர் ஊராட்சி சுக்காம்பட்டி வாரியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் வகையில் தொடர்ச்சியான இடை வெளியில் சிறுபள் ளங்கள் ஏற்படுத்தும் பணி ரூ.12.27 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆண்டாபுரம் ஊராட்சியில் ரூ.18.51 லட்சம் மதிப்பீட்டில் 5,000 மரக்ன்றுகள் நடப்பட்டு, மண் அணைத்து, நீரூற்றி வளர்க் கும்பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வளையப்பட்டி ஊராட்சியில் ரூ.14.15 லட்சம் மதிப்பீட்டில் நிலம் சீரமைத்து, குழிகள் எடுத்து, மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத் தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் இதுவரை 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர் க்கப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகள் நடுவதோடு இல்லாமல் தொடர்ந்து நீரூற்றி பராமரிக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக வரும் ஆண் டுகளில் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பரவலாகவும் சீராகவும் மழை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
ஆட்சியருடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன் உள்ளிட்டோர் சென்றனர்.



