வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாரம் செம்பராயநல்லூர் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் பயனாளிக்கு கட்டித்தரப்பட்டுள்ள அசோலா வளர்ப்பு தொட்டியினை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார்.
உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஐஸ்வர்யா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் செந்தில் குமரன், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தலைவர் வேல்முருகன், செம்பராயநல்லூர் ஊராட்சித்தலைவர் ஜீவிதா ரமேஷ், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்.



