கோவையில் உள்ள பூசாகோஅர (பிஎஸ்ஜிஆர்) கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. ‘உணவுப் பொருட்களை பேக்கிங் செய்வதற்கான பாலிமர் கலவை மற்றும் அவற்றின் செயல்முறைக்கான பாலிமர் கலவை’ என்ற தலைப்பில் இக் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் சார்ந்த பாலிமர்கள், அதன் நெகிழ்வுத்தன்மை, ஆயுள் மற்றும் நீர் மற்றும் பிற இரசாயனங்களுக்கு குறைவான எதிர்வினை காரணமாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், அந்த வகை பாலிமர்கள் மக்கிப் போகாமல் அப்படியே இருப்பதால் இயற்கைக்குக் கேடு விளைவிப்பதாகவும் இருந்தது.
இந்தக் குறை பாட்டைப் போக் கும் விதமாகவும், பிளாஸ் டிக் மாசுக்களைத் தவிர்ப்பதற்காகவும் பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறைப் பேரா சிரியை டாக்டர் சி. ஷர்மிளா, கல்லூரியின் ஆராய்ச்சித்துறை டீன் டாக்டர் ரமேஷ் சுப்ரம ணியன், ஆராய்ச்சி அறிஞர் திலகவதி ஆகியோர் மக்கும் தன்மையுடைய பாலிமரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த பாலிமர் தாள், இயற்கை மூலப் பொருள்களிலிருந்து உருவாக்கப்படுகிறது.
இயற்கை மூலத்திலிருந்து பெறப்படும் மக்கும் பாலிமர், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத எளிமையான சேர்மங்களாக எளிதில் சிதைந்துவிடும் தன்மை கொண்டது.
தற்போதைய காப்புரிமையானது செலவு குறைந்த மற்றும் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப பாலிமர் தாளின் கண்டுபிடிப்பைக் கையாள்கிறது. மேம்படுத்தப்பட்ட பாலிமர் தாள் சோதனைக்காக NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தால் சான்றளிக் கப்பட்டது.
இந்த பாலிமர் தாள் எளிதில் மக்கிப்போகும் தன்மை, வலிமை மற்றும் உணவு தரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செயற்கை பாலிமருடன் ஒப்பிடும்போது புதிதாகக். கண்டுபிடிக்கப்பட்டுள்ள பயோபாலிமரை உணவுப் பொருட்களை பேக்கிங் செய்யப் பயன்படுத்தலாம்.
காப்புரிமை சட்டம், 1970-ன் கீழ் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இக்காப்புரிமை 20 ஆண் டுகள் வரை செல்லுப டியாகத் தக்கதாகும்.
டாக்டர் சி.ஷர்மிளா மற்றும் குழு உறுப்பினர்கள் பணிகளைப் பாராட்டி இத்துறையில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிட, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர், செயலர், முதல்வர் ஆகியோர் ஊக்கமளித்தனர்.



