கோவை சின்ன வேடம்பட்டியில் உள்ள முல்லை மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி சார் பில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் தொடர்ந்து 5 மணி நேரம் இரட்டை கம்பு சிலம்பம் சுற்றி நான்கு வயது சிறுவன் விதுன் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிகழ்வில் சிறுவனின் பெற்றோர்களான நவீன்குமார் & வித்யஸ்ரீ, சிலம்பம் பயிற்சியாளர் முல்லை மார்ஷியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி பிரகாஷ்ராஜ், மேலாளர் கார்த்திக்குமார், நோபல் உலக சாதனை புத்தக நடுவர் விக்னேஷ் மற் றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



