fbpx
Homeபிற செய்திகள்மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பலன் தரும் திட்டங்கள் - கருத்தரங்கு

மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பலன் தரும் திட்டங்கள் – கருத்தரங்கு

ஹிந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் நிறுவனம் மத்திய பட்ஜெட்டை வர வேற்றுள்ளது. ஹிந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் 2022-23-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் குறித்து விவாதித்தது.

அப்போது அதில் கதிசக்தி போன்ற வளர்ச்சி திட்டங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும். உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை ஒருங்கிணைத்து, கவனம் செலுத்தும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நன்கு வளர்ச்சி அடையும்.

தொற்றுநோய் காரண மாக பாதிக்கப்பட்ட இந் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதல் 5 லட்சம் கோடி வரை உயர்த்தப்பட்ட கடன் உத்தரவாதத் திட்டத்தை 2023-ம் ஆண்டு வரை நீட்டித்திருப்பது மிகுந்த பயனளிக்கும்.

ஸ்டார்ட்-அப் நிறுவ னங்களின் பதிவை 31.3.2023 வரை நீட்டித் திருப்பதன் காரணமாக புதிய நிறுவனங்கள் துவங்கப்படுவதோடு தொழில் நுட்பத் துறைகளில் மேலும் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கருத்தரங்கில் ஹிந்துஸ் தான் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சிஏ.கே. சுரேஷ் பேசுகையில், பட்ஜெட்டில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அவசர கால கடன் வரி உத்தரவாதத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்நி றுவனங்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன.

இருப்பினும் அவர்கள் தங்கள் வலிமையை உண ர்ந்து நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். சரக்கு போக்குவரத்தில் சில உறுதியை கொண்டு வருவதற்கு கதி சக்தி குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று இந்நிறுவனங்கள் நம்பு கின்றன.

இந்நிறுவனங்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் காண வேண் டும். தபால் நிலையங்கள் வங்கி அமைப்புடன் முழுமையாக இணைக்கப் பட வேண்டும்.

இதன் விளைவாக, சில்லறை வாடிக்கையாளர்கள் அத்தகைய தபால் அலுவலக வங்கிக் கணக்குகளை துவக்குவதோடு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் கிளை விரிவாக்கத்திற்கு அவசியம் இருக்காது.

உயர்நிகர் மதிப்புக் கொண்ட தனிநபர்கள் மற்றும் தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் முதலீட்டு வங்கிகள் ஆகியவை தனியார் மற்றும் பொது-தனியார் கூட்டு முதலீடுகளுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img