அலன் கோயம்புத்தூர், ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு, தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பியாட்ஸ், ஐஐடி – ஜெஇஇ மற்றும் நீட் உள் ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு வகுப்பறை மற்றும் டிஜிட்டல் முறையிலான கல்வியையும் ஆலோசனைக ளையும் வழங்குகிறது.
டிஜிட்டல் கல்விகளுக்கான அதிநவீன கட்டமைப்புகளுடன் கல்வி உதவி திட்டங்களையும் வகுப்பு தேர்வுகள், நுழைவு தேர்வு களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது.
மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியான விடுதி வசதிகளையும் அளித் துள்ளது. வகுப்புகள் வரும் 2022 ஏப்ரல் 7-ம் தேதி முதல் துவங்குகிறது.
துவக்க விழாவில், அலன் கேரியர் இன்ஸ்டிடியூட் துணைத் தலைவர் பங்கஜ் அகர்வால் பேசும்போது, இந்தியாவில், தற்போது நடப்பில் உள்ள 10 ஆண்டுகளுக்குள் 2.5 கோடி பேருக்கு கல்வி அளிக்க வேண்டும் என்ற எங்களது தொலைநோக்கு இலக்கில், கோவை மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
நிறுவனர் சி. ஆனந்தன் பேசுகையில், கோட்டா ராஜஸ்தானில் உள்ள முன்னணி ஆலோசகர்களின் யோசனையின்படி இந்த வகுப்புகள், தமிழகத்தில் உள்ள கோவை நகரில் காந்திபுரம், 35 டாடாபாத் 7 வது வீதியில் துவங்கும்.
தென்னிந்திய அலன் மையத்தின் கல்வி பிரிவு தலைவர் மகேஷ் யாதவ் பேசுகையில், நிலையான, தரமான அனுபவம் கொண்ட ஆசிரியர் குழு, 33 ஆண்டுகளாக அலன் கோட்டாவில் உள்ள அதே நம்பகத்தன்மை, அர்ப்பணிப்பு உணர்வோடு இங்கும் பணியாற்றுவர் என்றார்.
கடந்த 30 ஆண்டுகளாக அலன் கேரியர் நிறுவனம், அகில இந்திய அளவில் 17 முறை அகில இந்திய அளவில் ஐஐடி – ஜெஇஇ மற்றும் நீட் தேர்வு எழுதியோருக்கு முதல் ரேங்க் பெற்றுக் கொடுத்துள்ளது.
நமது தாய் நாட்டை பெருமைமிக்கதாக மாற்றும் கோவையில் உள்ள மாணவர்கள் சமுதாயத்திற்கு அலன் கேரியர் இன்ஸ்டிடியூட் ஒரு பரிசாகும்.



