fbpx
Homeபிற செய்திகள்உஜ்ஜயனூர் அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை

உஜ்ஜயனூர் அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை

கோவை மாவட்டம் சின்னத்தடாகம் அருகே உஜ்ஜயனூரில் உள்ள ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

கோவை மெட்ரோ பாலிட்டன் ரவுண்ட் டேபிள்-62 ,லேடீஸ் சர்க்கிள்-23 மற்றும் ப்ரூக்பீல்ட் எஸ்டேட் நிறுவனம் ஆகியன இணைந்து இப்பள்ளியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் இந்த கட்டிடத்தை கட்டித் தர முன்வந்துள்ளன.

இதன் பூமிபூஜைக்கு சின்னத்தடாகம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் டி.என்.வேலுச்சாமி, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரக் கல்வி அதிகாரி ஜெ.பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மெட்ரோ பாலிட்டன் ரவுண்ட் டேபிள்-62 அமைப்பின் தலைவர் சூர்யா மூர்த்தி,லேடீஸ் சர்க்கிள்-23 அமைப்பின் தலைவர் மீனாட்சி ஆகியோர் தலைமை வகித்து கட்டிடப்பணிகளைத் தொடக்கி வைத்தனர்.

இதில் சின்னத்தடாகம் காவல்நிலைய இளம் ஆய்வாளர் ஆறுமுக நயினார், ரவுண்ட் டேபிள் அமைப்பின் வட்டாரத் தலைவர் விஷ்ணு பிரபாகர்,துணைத் தலைவர் ஸ்வேதா மூர்த்தி, செயலாளர் பங்கஜ் பையா, சங்கத்தின் தேசிய திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மோகன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img