fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். கல்லூரியில் வணிகக் கண்காட்சி

கே.பி.ஆர். கல்லூரியில் வணிகக் கண்காட்சி

கோவை கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், மே லாண்மையியல் துறை, ஆரோக்கிய சந்தை என்ற வணிகக் கண்காட்சியை நடத்தியது.

கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப் பித்தார். கே.பி.ஆர்.கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் செ. பாலுசாமி தலைமை தாங்கினார்

கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில் நுட் பகல்லூரி முதல்வர் முனைவர் எம். அகிலா, கே.பி.ஆர். மகளிர் கல் விப் பிரிவின் முதல்வர் பி.சரவணபாண்டி, வணிக வியல் புலமுதன்மையர் முனைவர் கு. குமுதாதேவி, மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர் தி.ஹே மலதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மேலாண்மைத் துறையின் புலமுதன்மையர் முனைவர் பி.சியாம்சுந்தர், மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் எஸ்.ராஜேஸ்வரி, நிகழ்ச்சியைத் ஒருங்கிணைத்து வழங்கினர்.

ஆரோக்கிய சந்தை 50 கடைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. கடைகளில் உணவு, உடை, இயற்கைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டி ருந்தன.

நிகழ்வானது, சிறு தொழில் பெண்கள் மற்றும் எஸ்எம்எம்இ-கள் கடைகளை வைத்துதங்கள் வணிகத்தை வளர்க்க வழிவகுத்தது.

கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச் சிக் கல்லூரி, கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மகளிர் கல்விப் பிரிவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5000 மாணவர்கள் கடைகளைப் பார்வையிட்டனர்.

மேலாண்மைத் துறையின் ஒவ்வொரு தனி மாணவரும் ஒரு வணிகத்தை நிர்வ கித்தல் மற்றும் அதன்வழி அனுபவ செய்முறைகளைக் கற்றுக் கொள்ளவும் இந்நிகழ்ச்சி ஆக்கப்பூர்வமாக அமைந்தது.

படிக்க வேண்டும்

spot_img