fbpx
Homeபிற செய்திகள்கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சி பெண்கள் ஐக்கிய சங்கம்...

கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சி பெண்கள் ஐக்கிய சங்கம் நடத்தியது

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில் பெண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கிறிஸ்து வரலாற்றை தத்ரூபமாக நாடக வடிவில் நடித்து காண்பித்தனர்.

கிறிஸ்துமஸ் மாதம் என்றாலே மாதம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துவின் பிறப்பை குறித்தான பாடல் நிகழ்ச்சி, நாடகம் என்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, கோவை காந்திபுரம் சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் பெண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் தலைமை போதகர் ஆயர் டேவிட் பர்னபாஸ் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு பாடல்கள், கிறிஸ்துவின் பிறப்பை கண்ணுக்கு முன் கொண்டு வந்த நாடகங்கள் உள்ளிட்ட அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் பள்ளி பெண்கள் ஐக்கிய சங்கத்தினர் தத்ரூபமாக நடித்தும் பாடியும் அசத்தினர்.

நிகழ்வில், பெண்கள் ஐக்கிய சங்க தலைவர் குளோரிலதா டேவிட், உப தலைவர் இனிதா ஜெயச்சந்திரன், பொருளாளர் விஜயா துரைராஜ், உதவி ஆயர் பாபி ஆல்பிரட் ஜோசப் , ஆலய செயலாளர் ஜெயச்சந்திரன், ஆலய பொருளாளர் தேவராஜ் சாமுவேல், மற்றும் போதக சேகர உறுப்பினர்கள், திருமண்டல பேரவை உறுப்பினர்கள், திருச்சபை உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img