தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தருமபுரி மாவட்டம் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மாடித் தோட்டத் தளைகளையும், ஊரகப்பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக 15 ரூபாய்க்கு 12 வகை காய்கறி விதைத்தளைகளையும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச் சத்துத்தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 ரூபாய்க்கு 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகளையும் வழங்கினார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மாலினி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி ஆகியோர் உள்ளனர்.



