கோவையில் கனமழை யால் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணியில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியுடன் இணைந்து சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் செய லாற்றியது. கோவையில் கடந்த 4-ம் தேதி மதியம் கனமழை கொட்டியது.
இதன் காரணமாக கோவை லங்கா கார்னர், அவினாசி சாலை மேம் பாலம், கிக்கானி பள்ளி கீழ் பாலம், சிவா னந்தா காலனி பைபாஸ் சாலை கீழ்பாலம் போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியது. இதில் தனியார் பஸ், கார் போன்றவை நீரில் மூழ்கின. வடகோவை, லட்சுமி மில்ஸ் ஆகிய பகுதிகளில் வெள்ளம் அதிக அளவில் வழிந்தோடியது.
வாகனப் போக் குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு, சாலை எங்கிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக் கித் தவித்தன. இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகராட்சி யுடன் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறு வனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இணைந்து உடனடியாக மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜி. சவுந்தரராஜன் அறிவுறுத்தலின்படி, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் அதிக திறன் கொண்ட மழை நீர் அகற்றும் பம்புகளுடன் கூடிய 5 வாகனங்கள் நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று பணிகளை துவக்கின.
இதில் 4 வாகனங்கள் அவினாசி சாலை மேம் பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கிய 43 லட்சம் லிட்டர் மழை நீரை அகற்றியது (முதல் வாகனம் 20 லட்சம் லிட்டர், இரண்டாவது வாகனம் 12 லட்சம் லிட்டர் மழை நீரை அகற்றியது).
மூன்றாவது வாகனம் மேம்பாலத்தின் மேற்கு பகுதி நுழைவுப் பகுதியில் தேங்கிய 6 லட்சம் லிட்டர் மழை நீரை அகற்றியது. நான்காவது வாகனம் பாலத்தின் மேற்கு பகு தியின் இரண்டாவது பகுதியில் தேங்கிய 5 லட்சம் லிட்டர் மழை நீரை அகற்றியது.
5-வது வாகனம் கோவை சத்தி யமங்கலம் சாலையில் கரட்டுமேடு பகுதியில் சிவன் கோவில் அருகில் தேங்கிய 8 லட்சம் லிட்டர் மழை நீரை அகற்றியது.
இந்த மகத்தான பணியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம், கோவை மக்களுக்கு சேவையாற்றியதை மிகவும் பெருமையாக கருதுகிறோம்.
இந்த மழைக்காலம் முடியும் வரை எங்களின் இந்த சமூக சேவை கோவையில் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சேவையானது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் கோவை யை தவிர சென்னை மற்றும் தூத்துக்குடியில் அந்தந்த மாநகராட்சியுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறு வனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.



