fbpx
Homeபிற செய்திகள்மலபார் கோல்டு நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி

மலபார் கோல்டு நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாநகராட்சி கல்வி அலுவலர் மைக்கேல் ராஜ், மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 352 அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வீதம், நலதிட்ட உதவிக்கான ரூ.17 லட்சத்து 60 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

இதனை மாணவிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். காசோலைகளை பெற்றுக் கொண்ட அனைத்து அரசு பள்ளி மாணவிகளும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மலபார், கோல்ட் நிறுவனத்தின் வர்த்தக தலைவர் ராஜசேகரன், மேற்கு மண்டல தலைவர் நவ்ஷாத், கோவை கிளை தலைவர் மனு நாயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img