கோவை அருகே கவுண்டம்பாளையத்தில் குடியிருப்புமனை வளாகத் திலுள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தில் உலக மாற்றுத்திறனாளி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பிசியோதெரபிஸ்ட் மதன கோபால் வரவேற்றார். சிறப்பு கல்வி ஆசிரியர்கள் தேன்மொழி, ராணி ஸ்ரீபிரியா, ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை திருமகள் வாழ்த்திப் பேசினார்.
இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பின் தன்னார்வலர் களான கார்த்திக், கார்த்திக் குமார், கார்த்திக் கனகராஜ், சாய் அபிலாஷ்
ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு 20க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு பரிசு களையும் இனிப்புகளையும் வழங்கி பாராட்டினர்.
தொடர்ந்து குழந்தைக ளின் தனித்திறன் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இறு தியில் பகல் நேர பரா மரிப்பு மைய ஆசிரியர் உமா நன்றி கூறினார்.
விழாவில் ஆசிரிய பயிற் றுனர்கள் கவிதா, திருமகள் இளங்கோ,சுதா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



