கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு டாக்டர் அம்பேத்கர் படத்துடன் கூடிய பெயர் பலகையை புதிப்பிக்க வேண்டும் என்றும் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த டாக்டர் அம்பேத்கார் பெயர் பலகையை புதிதாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரனிடம் டாக்டர் அம்பேத்கார் அரசு மற்றும் பொதுத்துறை எஸ்.சி.-எஸ்.டி. ஊழியர்கள் நலசங்கம் மாநிலத் தலைவர் பாரத் ஜோதி தலித் ஜெயராஜ் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதை தொடர்ந்து தாட்கோ சார்பில் டாக்டர் அம்பேத்கர் பெயர் பலகை புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
சங்கத்தின் மாநில தலைவர் பாரத் ஜோதி தலித் ஜெயராஜ் கோவை மாவட்ட ஆட்சி தலைவருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.



