சாலை விபத்தில் காயமடைந்த வர்களை மீட்டு சிகிச்சை அளிக்க உதவும் நபர்களுக்கு மத்திய அரசு சார்பில் நற்கருணை வீரன் விருது அறிமுகப்படுத் தப்பட்டுள்ளதாக ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாலைகளில் வாகன விபத்தின்போது ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் உயிர்களைக் காப்பாற்றிய நபருக்கு நற்கருணை வீரன் விருது மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் 2021 அக்டோபர் 15 முதல் 2026 மார்ச் 31 வரை செயல்பாட்டில் இருக்கும். மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ள நெறிமுறைகள்படி, விபத்தில் காயமடைந்த நபரை விபத்து நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத் து சென்று சிகிச்சை அளிக்க வழிவகை செய்ய வேண்டும்.
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய நபரின் விவரங்கள் காவல் துறை, சிகிச்சை அளித்த மருத்துவர் ஆகியோரிடமிருந்து பெறப்பட்டு மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பப்படும்.
போக்குவரத்து ஆணையரால் மேற்படி நபருக்கு ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்விரு தினை ஒருவர் ஆண்டுக்கு 5 முறை பெறலாம்.
தவிர மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவினரால் ஆண்டு தோறும் 3 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவிலான விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர்.
மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தில் உள்ள மதிப்பீட்டுக் குழுவால் அனைத்து மாநிலங்களிலிருந்து பெறப்படும் முன் மொழிவுகள் பரிசீலிக்க ப்பட்டு ஆண்டுதோறும் 10 நபர்கள் தேர்ந்தெடு க்கப்பட்டு தலா ரூ.1 லட்சம் பணம், சான்று கோப்பை ஆகியவை சாலை பாதுகாப்பு வாரத்தின் போது புதுதில்லியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



