Homeபிற செய்திகள்விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் பயிர்க்கடன்

விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் பயிர்க்கடன்

விவசாயிகளுக்கு, கவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக ரூ.25 இலட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டத் திற்கு உட்பட்ட கவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வழங்குவது குறித்தான முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கோபி சரக துணைப் பதிவாளர் ப.கந்தராஜா தலைமை வகித்தார். கோபி சரகத்தில் பயிர்க்கடன் வழங்குவது குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

முகாமில் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவது குறித்தான குறைகளை கேட்ட றிந்து அக்குறைகளை களைவது குறித்தான விளக்கமும் தெரிவிக்கப்பட்டது.
இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

கவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக ரூ.25 இலட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டது.

சங்கத் தலைவர் ராசமாணிக்கம், துணைத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img