காந்திபுரத்தில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் மா ணவர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தின் சில இடங்களில் மேற்கூரைகள் பழுதடைந்து இருப்பதாக பய ணிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், பால சுந்தரம் சாலையில் இருந்து பேருந்து நிலையத்துக்குள் நுழையும் பகுதியில் உள்ள நிழற் கூரையின் ஒரு பாகம் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் அங்கு பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிகள் இருவருக்கு லேசான காயம் ஏற் பட்டது. இதனை தொடர்ந்து மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் காந்திபுரம் பேருந்து நிலையத்தை இப்படி அஜாக்கிரதையாக பரா மரித்து வருவதாகவும், பெரு விபத்து ஏற்படும் முன் பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.



