மரியாதைக்கு பெயர்பெற்ற கோவை மாவட்டத்திற்கு இன்று 217வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
கடந்த 1804 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் உருவானது. நவம்பர் 24 ம் தேதியான இன்று கோயம்புத்தூர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது கோயம்புத்தூர் மாநகரம். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படுகிறது. மரியாதைக்கு பெயர்பெற்ற கோவை இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
நொய்யல் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள கோவை நகரம், மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மிக அழகான நகரங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் இருந்து வருகிறது. கடந்த 1804 ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, கோவை மாவட்டம் உருவாக்கப்பட்டு மாவட்டத்தின் தலைநகரமாக கோவை அங்கீகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பலரும் சமூக வலைத்தளங்களில் கோவை நகரம் தொடர்பான பதிவுகளை, மீம்ஸ்களையும் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.



