கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வுத் துறை மற்றும் நுண்ணறி ஆய்வகம் இணைந்து புரிந் துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா நடைபெற்றது.
ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் சயின்ஸ் மாணவர்களுக்கு டேட்டா சயின்ஸ் மற்றும் அனலிட்டிக்ஸ் திறனின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
நிகழ்ச்சியை பிரார்த்தனைப் பாடலு டன் எம்.அக்ஷயா தொடங்கி வைத்தார். உதவிப் பேராசிரியர் டாக்டர் டி. ஜெ னிஷ் வரவேற்றார். கே.பி.ஆர். கலை அறிவியல், ஆராய்ச்சி கல்லூரியின் முதல் வர் டாக்டர் எஸ். பாலுசாமி தலைமை வகித்தார்.
நுண்ணறி ஆய்வக நிறுவனர் மற்றும் இயக்குநரான ம.நவநீத் பேசும் போது, தற்போதைய சூழ்நிலையில் நிலவும் தரவு அறிவியல் (AI, ML, DL) மற்றும் அனலிட்டிக்ஸ் திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.
வெவ்வேறு தரவு பகுப்பாய்வுக் கருவி, தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி ஒரு மாதிரியை எவ்வாறு உருவாக்குவது மற்றும் மாதிரியை எவ்வாறு பயன்ப டுத்துவது என்பதையும் விளக்கினார்.
நுண்ணறி ஆய்வக ஐஓடி பிரிவுத் தலைவர் திமோதிடிபால், பேசும்போது நிரலாக்க மொழியின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். இளம் தலைமுறையினருக்கு நுண்ணறி ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஐஓடி பயன்பாடுகளை அவர் விளக்கினார்.
எம்.விஷோக், எம்,அக்ஷயா, கே.முரளிதரன் ஆகியோர் ஏஐகேம்-ஐ நடத்தினர். சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வுத் துறைத் தலைவர் ஆர். அஞ்ஜித் ராஜா நன்றி தெரிவித்தார்.



