fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட மக்கள் சபை கூட்டங்களில் இதுவரை 1 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன அமைச்சர் செந்தில்...

கோவை மாவட்ட மக்கள் சபை கூட்டங்களில் இதுவரை 1 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கோவை மாவட்டத்தில் நடக்கும் மக்கள் சபை கூட்டங்களின் வாயி லாக இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு இருக்கின்றன என்று அ¬ மச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் பேரூராட்சியில் மின்துறை அமைச்சர் செந் தில்பாலாஜி தலைமையில் மக்கள் சபை கூட்டம் நடந்தது.
மாவட்டஆட்சியர் சமீரன், முன்னாள் எம் எல்ஏவும், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான சி.ஆர்.ராமச்சந்திரன், கூடலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் அறிவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட பின்னர் பேசியதாவது:
முதல்வர் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் நடக்கும் மக்கள் சபை கூட்டங்களின் வாயிலாக இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு இருக்கின்றன.

இவை அனைத்தும் உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் கடந்த ஏழு மாதங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவம், இயற்கை பேரிடர் போன்ற அத்தி யாவசிய துறைகளில் அரசுத்துறைகள் மிகச் சிறப்பாக பணியாற்றி பொதுமக்களிடம் பாரா ட்டினைப் பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்னும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் பல உள் ளன என்பதை இதுவரை பெறப்பட்ட மனுக்களின் வாயிலாக அறிய முடிந்தது. வரும் 23-ம் தேதி வரவுள்ள முதல்வர், கோவைக்காக பல்வேறு திட்டங்களை அறிவிக்க இருக்கிறார். குறைகள் களையப்பட்டு எவ்வித பாரபட்சமும் இன்றி கோவையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கூடலூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதற்குரிய பூர்வாங்கப் பணிகள் திட்டமிடப்பட்டு விரைவில் வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள் அமைச்சர் செந்தில்பாலாஜி சந்தித்து தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், தங்கள் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கு பொருளாதார ரீதியிலான கடன் உதவிகளை ஏற் பாடு செய்துதர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

கூட்டத்தில் பேரூராட்சிகள் துணை இயக்குனர் துவாரகநாத் சிங், திமுகவின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முக சுந்தரம், காரமடை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.எம். டி. கல்யாணசுந்தரம், கூட லூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் அப் துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img