fbpx
Homeபிற செய்திகள்பாலியல் புகார்களை தெரிவிக்க உரிய தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும் மாணவர்கள் கோரிக்கை

பாலியல் புகார்களை தெரிவிக்க உரிய தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும் மாணவர்கள் கோரிக்கை

பாலியல் ரீதியான புகார்களை அளிக்க தமிழக அரசு வழங்கிய தொலைபேசி எண் தங்களுக்கு தெரியாது என்றும், இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவையை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்..

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “மாணவிகள் மீது பாலியல் தொல்லை நடைபெற்று வருவது அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் 6 முதல் 1 வருடம் வரை சிறையில் அடைக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்படுகின்றனர். இது போன்ற புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பெற்றோரிடம் கூட இது குறித்து தெரிவிக்க முடியாத சூழல் உள்ளது.

இதுகுறித்து புகார் அளிக்க தமிழக அரசு தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த புகார் எண் கூட எங்களுக்கு தெரியவில்லை.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புகார் அளிக்க உரிய தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும்“ என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img