Homeபிற செய்திகள்பெண்களுக்கு சுயதொழில் ஆசை காட்டி யூடியூப் சேனல் மூலம் ரூ.5 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர்...

பெண்களுக்கு சுயதொழில் ஆசை காட்டி யூடியூப் சேனல் மூலம் ரூ.5 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

சுயதொழில் செய்ய உதவி செய்வ தாக கூறி பெண்களிடம் ரூபாய் 5 கோடி வரை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவை இருகூரை சேர்ந்தவர்கள் சரளாதேவி மற்றும் கோதை நாச்சியார். இவர் கள் இருவரும் சேர்ந்து சர்வலட்சுமி என்ற யூடியூப் சேனலை தொடங்கினர். இவர்கள் யூடியூப் சேனல் மூலமாக பெண்களுக்கு சுய தொழில் பெற்றுத்தருவதாக கூறி விளம்பரப்படுத்தினர். அதற்கு கட்டணமும் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

இதனை நம்பி கோவை, திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணத்தை ஆன்லைன் மூலமாக அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கு அனுப்பினர்.

ஆனால் பணத்தை கொடுத்து நீண்ட நாட்களாகியும் பெண்களுக்கான சுய தொழில் சம்பந்தமான எந்த ஒரு தகவல்களையும் அவர்கள் தெரிவிக்காமல் மோசடி செய்தனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மதிப்பு ரூ 5 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர்.
பி

ன்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத் தரும்படி புகார் மனு அளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img