fbpx
Homeபிற செய்திகள்மக்கள் நீதி மய்யத்தின் மாரத்தான் போட்டி

மக்கள் நீதி மய்யத்தின் மாரத்தான் போட்டி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோவையில் நடைபெற்றது.

இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் (பரப்புரை) அனுஷா ரவி, கோவை மேற்கு மாவட்ட செயல £ளர் சிட்கோ யு. சிவா ஆகியோர் கூறியதாவது:
ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதால் பலருக்கு உயிர் கிடைக்கும்.

கமல்ஹாசன் 2002-ம் ஆண்டு மருத்துவ ஆராய்ச்சிக்காக தான் இறந்த பிறகு தனது உறுப்புகளை தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, கோவையில் அவரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மக்களிடம் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறிச்சி சுந்தராபுரம் பகுதியில் மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

மாரத்தான் போட்டியில் சுமார் 500 ஆண்கள் பெண்கள் மற்றும் குழந் தைகள் ஓடினார்கள். இவர்களுக்கு கமல்ஹாசன் உருவம் அச்சிடப்பட்ட டி சர்ட் வழங்கப்பட்டது.

மாரத்தான் போட்டியை கோயமுத்தூர் அத்லெட்டிக் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் முறையாக நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.

மொத்தப் பரிசுத் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
சுந்தராபுரம் சந்திப்பில் துவங்கி குரும்பபாளையம் பிரிவு வரை சென்று மீண்டும் சுந்தராபுரம் பகுதிக்கு வந்து நிறைவடைந்தது.

இப்போட்டி ஆண்கள், பெண்கள் மாணவர் கள், மாணவிகள் என தனித்தனியாக நடத்தப் பட்டு, பரிசு வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கோவை மேற்கு மாவட்டம் சார்பாக இப்போட்டி நடைபெற்றது. யு. சிவா தலைமை தாங்கினார்.

ஆ. மோகன் ராஜ், கண்ணன் சீதாபதி, மு. வினோபா, சு. விஜய குமார், து. சுரேஷ், சமிவுல்லா ஜாவித், முரளிதரன், பிரவீன், நாகராஜ், சு. ரகுநாதன் உள்ளிட்டோர் நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img