fbpx
Homeபிற செய்திகள்சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள் வழங்கல்

சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள் வழங்கல்

ஜீரோதா அறக்கட்டளை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் சார்பில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 இலட் சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜீரோதா அறக்கட்டளை, மந்த்ரா ஃ பார் சேஞ்ச், சூரியா அறக்கட்டளை ஆகியவை கல்வி, கோவிட் நிவாரணம் மற்றும் அவசர காலங்களில் பணிபுரியும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகும்.

கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், அசாம், தமிழ்நாடு,நாகலாந்து, கேரளா ஆகிய 6 மாநிலங்களில் கிராமப் புறங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆக் ஸிஜனேற்றப்பட்ட படுக்கைகளை வழங்கியுள்ளது.

இது குறித்து ஜீரோதா அறக்கட் டளையின் திட்டத் தலைவர் புனித் கூறுகையில், முதல்வர் ஸ்டாலினின் சிறப்பான செயல்பாடு எங்களைக் கவர்ந்துள்ளது.
இந்த நெருக்கடியின் போது சென்னை மக்களுக்கு ஆதர வளிக்க நாங்களும் எங்கள் தன் னார்வலர்களும் ஒரே எண்ணம் கொண்ட நன்கொடையாளர்களின் ஆதரவை தீவிரமாகப் பெற்றுள்ளோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 1000 ரேஷன் கிட்கள், 1000 சுகாதாரப் பெட்டிகள்,2000 உலர் உணவுப் பெட்டிகள் வழங்குகிறோம்.
இத்கையஉதவி தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்ய நீண்ட தூரம்செல் வோம் என்று நம்புகிறோம் என்றார்.

எங்களின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அவசரகால நடவடிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளோம்.

முகாமில், மளிகை பை (அரிசி, பருப்பு, சன்னா, வறுத்த பருப்பு, எண்ணெய், ஆட்டா, பான்சி சோஜி, உப்பு, சர்க்கரை, சாம்பார் தூள், தேயிலை தூள், பால் பவுடர்,மிளகாய் தூள், சோப்பு, டூத் பேஸ்ட்), மருந்துப் பொருட்கள், சுகாதாரப்பொருட்கள், ஜாக்கெட்டுகள்/ஸ்வெட்டர்கள், குடை, தண்ணீர் சேமிப்புகொள்கலன்,தார் மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், கொசுசுருள்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள், பிஸ்கட், மேகி, குழந் தை உணவுகள் போன்ற உலர் உண வுகள் வழங்கப்பட்டன.

மொத்த நிவாரண உதவிகளின் மதிப்பு ரூபாய் 25 இலட்சமாகும்.
இந்தியாவின் மிகப் பெரியபங்கு தரகர்ஜீரோதாவின் அறக்கட்டளை மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img