Homeபிற செய்திகள்மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள், மாணவர்கள் போராட்டம்

மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள், மாணவர்கள் போராட்டம்

கோவை மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத் ததாகவும் தற் கொலைக்கு தூண்டியதாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு அமைப்புகள், சக மாணவிகளின் உறவினர்கள், பெற் றோர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி யின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்துகின்றனர். பாலியல் தொல்லை குறித்து பள்ளி முதல் வரிடம் புகார் தெரிவித்த போது, இதுகுறித்து நடவ டிக்கை எடுக்காமல் வீட்டில் சொல்ல கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தொடர்ந்து தொலை பேசியிலும் குறுந்தகவல் அனுப்பியும் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.

இந்த வழக்கு தொடர் பாக மேலும் சிலரை கைது செய்ய வேண்டும் என்ற குற்றச் சாட்டை வைத்து போராட்டம் நடத்துகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அங்கு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை அந்த உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img