fbpx
Homeபிற செய்திகள்செல்வபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிடம் கட்டித் தந்த இன்னர்வீல் சங்கம்

செல்வபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிடம் கட்டித் தந்த இன்னர்வீல் சங்கம்

கோயம்புத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக பெண்குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாடுகளுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்முறை படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்குவது, புறநகர் மற்றும் நகர்புற பகுதிகளில் தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்கள் நடுவது, பசிப்பிணி போக்கும் முழுநேர அன்னதான திட்டம் என பல்வேறு சமுதாயம் நலம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் இன்னர் வீல் கிளப்பின் 46 வது ஆண்டு விழா நலத்திட்ட பணிகளின் ஒரு பகுதியாக ,கோவை செல்வபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில், வெளிநோயாளிகள் பிரிவினருக்கான தனி கட்டிடம் மற்றும் கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை அர்ப்பணிக்கும் விழா நடந்தது. கோயம்புத்தூர் இன்னர் வீல் கிளப் தலைவர் தீபா வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். புதிய கட்டிடத்தை இன்னர் வீல் கிளப்பின் தலைவர் அலமேலு சிவராமகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழாவில், முன்னாள் தலைவர் கீதா பத்மநாபன், மாவட்ட தலைவர் அனிதா ஸ்ரீனிவாஸ், கிளப் நிர்வாகிகள் புவனா சதீஷ், பினால் ஷா, ராதிகா பரமேஷ், ஜெயலட்சுமி ரமேஷ் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img