fbpx
Homeபிற செய்திகள்இறக்குமதி தீர்வையை திரும்பப் பெற இந்திய வார்ப்படத் தொழில் நிறுவனம் வலியுறுத்தல்

இறக்குமதி தீர்வையை திரும்பப் பெற இந்திய வார்ப்படத் தொழில் நிறுவனம் வலியுறுத்தல்

இறக்குமதி தீர்வையை திரும்பப் பெற இந்திய வார்ப் படத் தொழில் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. மூலப்பொருட்களின் விலை கடும் உயர்வைச் சந்தித் துள்ளதால், உலோக வார்ப்புருக்களைத் தயாரிக்கும் வார்ப்படத் தொழில் நிறுவனங்கள் தொழிலை சுருக்கிக் கொள்ளும் அல்லது நிறுத்தி விடும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளன.

உயர்ந்து வரும் மூலப்பொருள் விலை உயர்வு தரும் அழுத்தத்தை அந்த நிறுவனங்களால் தாங்க முடியவில்லை. மூலப்பொருள், உள்ளிடும் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக வார்ப்படத் தொழிலின் உற்பத்திச் செலவு கடந்த இரண்டு மாதங்களில் 25 % அதிகரித்துள்ளது.

குறைந்து வரும் லாபம், சுருங்கி வரும் நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் காரணமாக நாடெங்கிலும் உள்ள வார்ப்படத் தொழில் நிறுவனங்கள் தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கோ அல்லது அதைவிட அதிக காலத்துக்கோ உற்பத்தியை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று இந்திய வார்ப்படத் தொழில் நிறுவனம் (Institute of Indian Foundrymen – IIF)தெரிவிக்கிறது. இது நாடெங்கிலும் உள்ள வார்ப்படத் தொழிற்சாலைகளுக்கான அமைப்பாகும்.

ஐ.ஐ.எஃப். தலைவர் தேவேந்திர ஜெயின் கூறுகையில், “பெரும்பாலான மூலப்பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, இறக்குமதித் தீர்வையைக் குறைத்தால் உற்பத்திச் செலவு குறையும்.

இரும்பு உலோகக் கலவை உற்பத்தியை ஆதரிக்கவும், வார்ப்புரு தொழிலில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்களுக்கு கொள்கை ஆதரவு அளிக்கவும் அரசு நடவடிக்கை வேண்டும்.

மூலப்பொருள் விலை அதிகரிப்பு என்பது இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. இது உலகளாவிய போக்கு. வார்ப்படத் தொழில் முதலாளிகள் மட்டுமல்லாமல் சீனா, கொரியா, ஜப்பான், தைவான், வியட்நாம், மலேசியா போன்ற துணைத் தொழிலில் ஈடுபடும் நாடுகளும் இதுகுறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

முன்னுதாரணமற்ற இந்த விலை உயர்வு தொடர்பாக சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய வார்ப்படத் தொழில் அமைப்புக் கூட்டத்தில் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தியாவில் வார்ப்புரு தொழில்துறை 18மில்லியன் மெட்ரிக் டன் மொத்த உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது எனஐ.ஐ.எஃப்.பின் கணிப்பு தெரிவிக்கிறது.

உற்பத்திச் செலவு அதிகரித்து வருவதன் காரணமாக இந்தத் திறனில் 60 % மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img