மிக நீண்ட இழை பருத்தி வளர்ச்சி உற்பத்திக்கு சுயசார்பு இந்தியா திட்டத் தின் கீழ் ஊக்குவிக்க சைமா பருத்தி அபிவிருத்தி ஆராய்ச்சிக் கழகம் அரசிடம் கோரிக் கைவிடுத்துள்ளது.
சைமா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகத் தின் தலைவர் ஆர். ரவிச் சந்திரன், சங்கத் துணைத் தலைவர் ஜி.வெங்கட்ராமசந்திரன், சைமா செயலர் மற்றும் தலைமை பருத்தி ஆராய்ச்சியாளர் முனைவர் ஆஷா ராணி ஆகியோர் தமிழக ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்தனர்.
அவர்கள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை ஆண்டிற்கு ஐந்து லட்சம் பேல்களில் இருந்து 30 லட்சம் பேல்களாக அதி கரிக்க வேண்டிய திட்டங்கள் நேரில் வழங்கப்பட்டன.
மிக நீண்ட இழை பருத்தி அதிகரிப்பதற்கும், மாசில்லா பருத்தியை உற்பத்தி செய்வதற்கும், சைமா பருத்தி பறிக்கும் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்திய பருத்தி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரை சந்தித்த பிரதிநிதிகள் குழு, மிக நீண்ட இழை பருத்தி உற்பத்தி மற்றும் சைமா பருத்தி பறிக்கும் இயந்திர உற்பத்தி அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தது.
2019-20 பருத்தி சீசன் காலத்தில் மாநில அரசின் நிதி ஆதரவோடு சங்கம் 200 மெட்ரிக் டன் நீண்ட இழை பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது. அதன் மூலம் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் பலன் அடைந்தனர்.
95 ஆயிரம் பேல்கள் தரமான மிக நீண்ட இழை பருத்தி உற்பத்தி செய்ய முடிந்ததால், தொழிற்துறையினருக்கு பேருத வியாக இருந்தது. சங்கத்தால் ஆண்டிற்கு 1000 மெட்ரிக் டன் அளவிற்கு நீண்ட இழை பருத்தி விதைகளை உற்பத்தி செய்து வழங்க முடியும். இதன் மூலம் 3.3 லட்சம் விவசாயிகள் பயன் அடைவர்.
ஆண்டுக்கு ஆறு லட்சம் பேல்கள் பஞ்சு உற்பத்தி செய்ய முடியும்.
மத்திய அரசு, சைமா பருத்தி பறிக்கும் இயந்திரத்திற்கு ஏற்கனவே 40 சதவீதம் மானியம் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, தமிழக அரசும் 50 சதவீத மானியத்தை வழங்கினால், மீதி 10 சதவீதத்தை விவசாயிகள் சொந்த செலவில் செய்ய வசதியாக இருக்கும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
உலகின் தலைசிறந்த சுவின் பருத்திக்கு பதிலாக தற்போது சைமா சங்கம் புதிய நீண்ட இழை பருத்தி விதையை உருவாக்கி உள்ளது. இதன் உற்பத்தியின் காலம் 210 நாட்களில் இருந்து 170 நாட் களாக குறைக்கப்பட்டுள்ளது.
சைமா பருத்தி பறிக்கும் இயந்திரத்திற்கு மானியம் கோரியும், அதற்கு அரசின் நிதியாதாரம் கோரி சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்த வேண்டிய அவசியமும் இந்திய பருத்தி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரிடம் விவரிக்கப்பட்டது. இவ்வாறு பொதுச்செயலாளர் டாக்டர் கே. செல்வராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



