கேரள மாநிலம் கண் ணூரில் இருந்து பெங்களூரு யஸ்வந்த்பூருக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. கோவை வழியாகச் செல்லும் இந்த ரயில் இன்று காலை 4 மணியளவில் தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே விபத்தில் சிக்கியது.
அப்போது மழை காரணமாக மலைப்பாதையில் இருந்த பாறைகள் திடீரென ரயில் பெட்டிகள் மீது விழுந்தன. இதில் 6 பெட்டிகள் மீது விழுந்ததால் ரயில் தடம் புரண்டது.
இதைத்தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் பெட் டிகள் மீது பாறைகள் உருண்டு விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே 6 பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் ரயிலை விட்டு இறங்கினர்.
அப்போது மழை பெய்து கொண்டே இருந்ததால் நடுவழியில் பயணிகள் தவித்தனர். மேலும் மலையில் இருந்து உருண்ட பாறைகள் தண்ட வாளத்தில் கிடந்தன.
இதுபற்றி பெங்களூரு ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கோட்ட மேலாளர் ஸ்ரீஷ்யாம் சிங் தலைமையில் மருத்துவ உபகரண வேனுடன் விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் விரைந்து வந்து ரெயில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்தும் மீட்பு குழுவினரும் வந்தனர்.
தடம்புரண்ட ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவரும், பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ரெயிலில் 7 பெட்டிகள், மாற்று என்ஜின் மூலம் திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதே போல் 4 பெட்டிகள் தருமபு ரிக்கு கொண்டு செல்லப் பட்டன.
பாறைகள் விழுந்து கிடக்கும் 6 பெட்டிகளை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் ரயில்வே ஊழியர்கள் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன்காரணமாக சேலம்-பெங்களூரு ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ரயில் தடம் புரண்ட விபத்தில் ரெயிலில் இருந்த 2348 பயணிகளும் காயம் எதுவுமின்றி உயிர்தப்பினர். பயணிகள் குறித்து தகவல்களை பெற தர்மபுரி, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.



