fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கூட்டுறவு வாரவிழா தொடங்கியது

கோவையில் கூட்டுறவு வாரவிழா தொடங்கியது

கோவை மாவட்டத்தில் 68வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் முதல் நிகழ்வாக கூட்டுறவுத் துறை பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் மற்றும் முதல்வர் என்.ஸ்ரீதர், கூட்டுறவு சார் பதிவாளர்கள் முத்துக்குமார், கிருபாகரன், பாரதி மற்றும் மேலாண்மை நிலைய பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img