இந்தியாவின் முன்னணி பகுப்பாய்வு சேவை நிறுவனமான மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட், தனது புதிய மையத்தை கோவையில் தொடக்கியுள்ளது.
இம்யூனோ லிஸ்டர் மெட்ரோ போலிஸ் லிமிடெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், மாதத்துக்கு ஆயிரம் பரிசோ தனைகளை எடுத்து உடனடியாக துல்லி யமான தரத்தில் முடிவுகளை அறிவிக்கும் திறனைக் கொண்டது.
இந்த பகுப்பாய்வு மையத்தை ராவ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், கருப்பை சிகிச்சை மையக் குழுவின் தலைவருமான டாக்டர் ஆஷாராவ் தொடங்கி வைத்தார். இம்யூனோலிஸ்டர் மெட்ரோ பாலிஸ் நிறுவனம் 300 வகையான பரிசோ தனைகளை அளிக்கவுள்ளது.
நோய் தீவிரமாகாமல் முன்பே கண்டறிவது, நோயின் தன்மையை ஆராய்வது, பரிசோதனைகள் மூலம் நோயை உறுதி செய்வது, நோயின் தீவிரத்தை கண்கா ணிப்பது ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் பகுப்பாய்வு மையத்தில் மேற் கொள்ளப்படும்.
புதிய பகுப்பாய்வு மையம் திறப்பு நிகழ்ச்சியில், மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி விஜேந்தர்சிங் பேசியது: தமிழகத்தில் எங்களது சிறகுகளை அகலமாக்கி பறப்பதற்கான அறிவிப்பினை வெளியிடுவதில் மிகவும் பெருமிதமும், மகிழ்ச்சியும் கொள்கிறோம்.
தமிழகத்தின் மிக முக்கிய சந்தைகளில் கோவையும் ஒன்றாகும். நோயாளிகளுக்கு மிகச் சிறந்த நம்பகத் தன்மையுடன் சேவை ஆற்ற வேண்டும் என்பதில் உறுதி பூண்டுள்ளோம். இந்தச் சேவையுடன் மிகச்சிறந்த சுகாதார ஆதரவையும் அளிக்கிறோம் என்றார்.
மெட்ரோபோலிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் 10 மிகப்பெரிய பகுப்பாய்வுக் கூடங்களையும், 260 சேமிப்பு மையங்களையும் கொண்டிருக்கின்றன. மிகவும் குறைந்த விலையில் தரமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆய்வு முடிவுகளை மெட்ரோபோலிஸ் வழங்கி வருகிறது.
இந்தப் பணிக்காக இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு தரச்சான்றுகள் மற்றும் விருது களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு பரிசோத னைக்குமான அளவீட்டு முறைகளை வகுத்து அளித்ததில் மெட்ரோபோலிஸ் நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த அளவீட்டு முறைகளே இப்போது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பகுப் பாய்வு கூடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கென தனித்த மருத்துவ பரிசோதனை அளவீட்டு முறைகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே வருகிறது மெட்ரோபோலிஸ் நிறுவனம். கோவையில் புதிய பகுப்பாய்வு கூடம், ஆர்.எஸ்.புரம் மேற்குடிவிசுவாமி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.



