இந்தியாவில் எஃப்பி கேமிங் பிரஸ் ஸ்டார்ட்(FB Gaming Press Start) என்னும் கேமிங் நிகழ்ச்சியை ஃபேஸ்புக் நிறுவனம் முதல் முறையாக நடத்தியது.
ஃபேஸ்புக் கேமிங் பிஸ்னஸ் மற்றும் ஆப்பரேஷன்ஸ் பிரிவின் துணைத் தலைவர் ஜியோஹன்ட், இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணைத் தலைவர் அஜித்மோகன், பேஸ்புக்கின் வணிக மேம்பாட்டு இயக்குனர் மனோகர் ஹாட் சாந்தனிஆகியோர் துவக்க உரையை வழங்கினர்.
FB Gaming Press Start நிகழ்ச்சியின் முதல் நாளில் ,பணம் ஈட்டுதல், ஆகு மெண்டெட்ரியாலிட்டி (இணைப்பு நிஜ மாக்கம்),ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் கேம்ஸ் தளம் ஆகியவற்றை பயன்படுத்தி கேம்ஸ் பப்ளிஷர்கள் மற்றும் டெவலப்பர்கள் எப்படி தங்கள் கேம்களை மேலும் சிறப்பாக்கலாம் என்பது குறித்து ஆலோச னைகள் வழங்கப்பட்டன.
இரண்டாவது நாளில் பங்கேற்ற கிரியேட்டர்கள், பப்ளிஷர்கள் மற்றும் இணைய – விளையாட்டு (ஈ ஸ்போர்ட்ஸ்) நிறுவனங்களுக்கு – கேம்ஸ்களை உருவாக்க விரும்பும் புதிய மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த கிரியேட்டர்கள் ஆகிய இருதரப்பினருக்கும் உதவும் ‘ஃபேஸ்புக்கின் கேமிங் கிரியேட்டர் புரோ கிராம்கள்’ பற்றியும்; ‘அந்த தளத்தில் உள்ள பணமீட்டும் அம்சங்களைப் பயன்படுத்தி எப்படி கிரியேட்டர்கள் நிலையான வரு மானத்தை ஈட்டுவது’ என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி குறித்து ஃபேஸ்புக் இந் தியாவின் வணிக மேம்பாட்டு இயக்குனர் மனோகர் ஹாட் சாந்தனி பேசுகையில், “இந்தியா உலகின் மிகப்பெரிய கேமிங் மார்கெட்களுள் ஒன்றாக வளர்ந்து வருகிறது.
ஃபேஸ்புக்கில் கேமிங்கில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதை கண்டு வருகிறோம், கேமிங் வீடியோக்களை நேரலையில் ஒளிபரப்பப்படுவதை காண் பவர்களின் எண்ணிக்கை 530 சதவீதத்திற்கும் மேலாக கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளது.
ஃபேஸ்புக்கில், மக்கள் சுவாரஸ்ய மான கேமிங் வீடியோக்களை காணலாம், தங்களுக்குப் பிடித்த கிரியேட்டர்கள் மற்றும் கேம்களை பின் தொடரலாம், அந்தந்த கேமிங் குழுக்களுடன் இணைப்பினை உருவாக்கி உரையாடல்களை தொடரலாம், புதிய கேம்களை கண்டறிந்து உலகில் உள்ள பலருடன் அந்த கேம்களை விளை யாடலாம் – இவையனைத்தையும் ‘ஃபேஸ் புக்’ என்கிற ஒரே இடத்தில் செய்யலாம் என்றார்.



